THAMPALAKAMAM PHOTOS
-
*
*
*Thampalakamam is a village in the **Trincomalee District** of **Sri Lanka**and it is located about 20 km South-West of
**Trincomalee**.
*
கப்பல்துறை திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்
-
*கப்பல்துறை திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் வீதியில் 10 கி.மீ
தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள
சிறிய குன்றில் ...
வீடியோ - வேட்டைத் திருவிழா - 2010
-
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2010 @ Yahoo! Video
*தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2010 *
[image: Bookmark and Share]
கோணேசர் கல்வெட்டு
-
**
*
*
*'**கோணேசர் கல்வெட்டு' என்கின்ற இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த
கவிஞர் இராஜவரோதயம் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக்
கருதப்ப...
நாடு பெற்ற சுதந்திரத்தால் நமக்கு என்ன நன்மை
-
*வெள்ளைக்காரன் விலகிப்போனால்
விடிவு வரும் என்று
கொள்ளை ஆசை கொண்டிருந்தோர்
குடும்ப வாழ்க்கை இன்று
எள்ளளவும் உயர்வு இன்றி
இரந்து உண்ணும் நிலையில்
உள்ளனரே அவர்...
என்றோ, எங்கோ, செய்யப்பட்ட சிறு உதவி
-
நீண்டதொரு காலப்பகுதியின் பின் உலகின் எங்கோ ஒரு மூலயில் நடந்த உண்மைச்
சம்பவம் ஒன்றினை ஒர் உயர் அதிகாரியிடமிருந்து கேட்கும் வாய்ப்பு இன்று
எனக்குக் கிட்டியது...
வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல. பரம்பரையா வாழ்ந்து, நாம விளையாடி, வளர்ந்து நம் விருப்பத்தில் எங்கயோ பிழைப்புன்னு போனாலே வீடு கவனம் வந்திச்சோ எல்லாத்தையும் கடாசிட்டு வந்து ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத் தடவி, ஒரு ஒரு செடியா பார்த்து பேசி கொஞ்சி, நம் மண்ணின் சில்லிப்பில் கால் பதிய நிக்கமாட்டமான்னு ஏங்கிப் போகுமில்லையா? அது மறுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வலி. ஆறுதல் சொல்ல முடியாத வலி. அதை விட ஆயிரம் வீடு வாங்கினாலும் அத்தனையும் கொடுத்து விடுகிறேன். இடிந்து சிதிலமானாலும் பரவாயில்லை. அந்த மண் எனக்கு வேண்டும் என என்றும் வலிக்கும் வலி. ஜீவ நதியில் ஜீவராஜ் வீடு என்ற இடுகையில் அந்த வலியை நாம் உணர வைக்கிறார். வலைச்சரத்துக்காக நான் தேடியதில் கிடைத்த இன்னோரு வைரம் இவர் எழுத்து. http://blogintamil.blogspot.com/2010/01/blog-post_08.html
தம்பலகாமத்தில் பிறந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் நான் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவராகப் பணிபுரிகிறேன். எனக்குச் சிறுவயது முதல் இலக்கியம், சினிமா, நாடகம் , புகைப்படம் எடுத்தல் என்பன தொடர்பில் ஆர்வம் இருந்துவருகிறது. இவற்றோடு இப்போது எமது வரலாற்றை அறிந்து கொள்வதிலும் , எமது பாரம்பரியங்களின் தொன்மைதனை ஆவணப்படுத்துவதிலும் ஈடுபாடு அதிகரித்திருக்கிறது.
நான் வாழும் சூழலில், என்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை என் எழுத்துக்கள் மூலமாக மற்றவர்களோடு பகிர்துகொள்ளவிளைகிறேன். இலக்கிய வடிவங்களை கையாழுவதில் ஆரம்பப் படிநிலையில் இருக்கும் எனக்கு இணையம் பயிற்சிக் களமாக இருக்கிறது. நிறைய உள்வாங்கிக் கொள்ளவும், சிறியளவில் என்னுணர்வுகளை வெளிப்படுத்தி, அதற்குவரும் எதிர்வினைகள் மூலம் என் படைப்புக்களைச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.
பாடசாலைக்காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த இந்தப் பயணம் பின்னர் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் என்று தொடர்ந்து இன்று இணையதோடு இணைந்திருக்கிறது. 1991 இல் எனது முதல் ஆக்கம் வீரகேசரிப் பத்திரிகையிலும் அதைத்தொடர்ந்து மித்திரன் வாரமலர், தினமுரசு ,சங்கு நாதம் , இளவரசி , 'நாடி' மருத்துவ பீட ஆண்டிதழ் என்பவற்றிலும் வெளிவந்திருக்கின்றன.
அப்பப்பாவின் ( அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் ) தூண்டுதலால் எழுதுவதிலும் , வாசிப்பதிலும் ஏற்பட்ட ஆர்வம் பின்னாட்களில் பாடசாலை , கலாசாலை ஆசிரியர்களது ஊக்குவிப்பால் வலுப்பெற்றது. என்னை உருவாக்கிய கல்விக்கூடங்கள் தம்பலகாமம் சாரதா வித்தியாலயம், தம்பலகாமம் ஆதிகோணநாயகர் மகா வித்தியாலயம், இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி , யாழ்.மருத்துவபீடம்(2006) என்பனவாகும். பாடசாலைக்கல்விக்கப்பால் நாங்கள் வாழ்ந்த சூழலும் , எதிர் கொண்ட மிகக் கடுமாயன சூழ்நிலைகளும் ,இடப்பெயர்வும் எங்களைச் செதுக்கியது என்றால் மிகையில்லை.
பரந்துபட்ட வாசிப்பனுபவமும் , எண்ணங்களை எழுத்தாக்கும் செயன்முறையும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குவதோடு மனத்தைப் பண்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்தவகையில் எழுதுவதிலுள்ள ஆர்வம் தனியானதாக , தணியாததாக இருக்கிறது எனக்கு.
ஜீ..திரட்டி வலைப்பதிவின் சொந்தக் காரர். எக்கச் சக்கமான வலைப்பூக்களை ஆரம்பித்து எல்லா இடத்திலும் தவறாது பதிவிடும் அற்புத கலைஞன். இவரின் கவிதைகளும் வியக்கத் தக்கவை! இவ் வித்தகருக்கு என் இவ் விருது சென்றடைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியேயாகும்
ஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு (13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் என்னைச் சுற்றி நிறைய நடந்துவிட்டிருக்கிறது.
பல நல்ல உள்ளங்களின் இணைவிற்கு காரணமாக இருந்து, துயர்நிறைந்த நாட்களில் நல்லதொரு தோழனாகச் செயற்பட்டது இந்த இணைய ஊடகம்.
பணிகாரணமாகவும், இங்குள்ள நிலை காரணமாகவும் பதிவிடுதலில் இருந்த தொடர்ச்சியற்றதன்மையையும் மீறி நிறைய அன்புள்ளங்களைச் சம்பாதிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
தங்களது எண்ணப்பகிர்வுகள் மூலம் தொடர்ந்தும் உற்சாகமூட்டிவரும் பதிவுலக நண்பர்களுக்கும், இணைய வாசகர்களுக்கும் இணைப்புப்பாலமாகச் செயற்படும் திரட்டிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத்தது. தமிழ்மண உதவிப்பக்கம்மூலம் வலைப்பூ உருவாக்கிய எனக்கு குறுகிய காலத்தில் கிடைத்த நல்லதொரு அங்கீகாரமிது. தமிழ்மண நிர்வாகிகளுக்கும், சகபதிவர்களுக்கும் ,வலைப்பூ வருகையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எனக்கும் இணையத்துக்குமான உறவு யாழ் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் எனக்கு இணையம் ஒரு செய்தி ஊடகமாகவே அறியப்பட்டிருந்தது (அடிபாடு {சண்டை} நடந்தால் ஓடிப்போய் எல்லோருமாகப் பார்ப்போம்) இருந்தும் பின்னாளில் சாதாரண இணையப்பக்கங்கள் பார்வைக்கு கிடைக்கத்தொடங்கிய வேளையில் (கவிதை சம்பந்தமான) நாமும் இதுபோல ஒரு வலைப்பூ தொடங்கலாமே எனச் சின்னதாய்ஆசையொன்று மனதில் துளிர்விடும். ஆனாலும் கணிணி பற்றிய அடிப்படைக்கு குறைவான அறிவும், வலைத்தளம் உருவாக்கவும் அதை தொடர்ந்து செயற்படுத்தவும் நிறையச் செலவாகுமென்ற பயமும் எனது வலைப்பூக்கான முயற்சிகளைக் கிடப்பில் போட்டிருந்தது.பின்னாளில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, கல்விக்கான எனது போராட்டம் என்பவற்றில் வலைப்பூ ஆசைகள் அடிபட்டுப்போனது.
சற்றும் மனந்தளராத விக்கி ரமாதித்தனாக இணைய வேதாளத்துடனான எனது வலையேற்றும் முயற்சிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு மீள ஆரம்பிக்கப்பட்டது. அதிர்ஸ்டவசமாகஇலவச வலைத்தளம் உருவாக்குவதற்கான முயற்சியில் கூகிளில் தேடியலைந்துகொண்டிருந்தபோது ‘தமிழில் எழுதலாம் வலையில் பரப்பலாம் வாருங்கள்’என்ற அழைப்பு என்னையும் உள்ளழைத்துக்கொண்டது. பிறகென்ன இருவாரங்கள் தட்டுத்தடுமாறி முட்டி மோதி,பல நாட்கள் உறங்காமலே விடிய, ஒருவாறு 13.08.2008 அன்று எனது முதல் பதிவினை வெற்றிகரமாக வலையேற்றினேன்.
என்னுடைய எண்ணங்களைக் கவிதையாக எழுதிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். முழுமையான சுதந்திரத்துடன் எனது எண்ணங்களைப் பிரசுரிக்கிறேன் என பொய்சொல்ல முடியவில்லை. நானாக வகுத்துக்கொண்ட சில மட்டுறுத்தல்களுடன் வலைநாடி வருகிறது என் பகிர்வுகள். நீங்களதைக் கவிதையாக ஏற்றுக்கொண்டால் சந்தோசம், இல்லையென்றாலும் காரியமில்லை அது ஒரு கருத்துப்பகிர்வாகவேனும் இருக்குமல்லவா?
வலைக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வளமானவையாகஅமையுமென்ற நம்பிக்கையோடு இந்த நட்சத்திர வாரத்திலும் வழமைபோல பதிவிட உத்தேசித்திருக்கிறேன்.
மீண்டுமொருமுறை தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கராசா ஜீவராஜ் - இலங்கை, தம்பலகாமத்தைச் சேர்ந்த வலைப்பதிவரான இவர் ஒரு வைத்தியரும் கூட. தற்பொழுது திருகோணமலையில் வசித்துவரும் இவருக்குச் சொந்தமாக பல வலைப்பூக்கள் உள்ளன. அவற்றில் அருமையான மருத்துவக்குறிப்புக்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல எழுதிவருகிறார்.
தங்கராசா ஜீவராஜ்--இவர் ஒரு மருத்துவர்.எல்லோரும் ஒரு வலைத்தளம் வைத்து இருப்போம்! ஆனால் இவர் வைத்திருப்பதோ ஏழு-7-வலை! இதில் ஜீவநதியைப்பார்த்தீர்களானால் ஏதோ இந்தியக்கோவிலுக்குள் நுழைந்தது போல் இருக்கும்!http://geevanathy.blogspot.com/
மேலே உள்ள தள்த்தில் நுழைந்தால் ஒரு மகாபாரதப்போர் நடந்து கொண்டு இருக்கு.பார்க்கக் கண் கோடி வேண்டும்http://kmoli.blogspot.com/ல் இவருடைய கவிதைகள் பாருங்கள்!
இவர் நமக்கு மட்டுமே புதியவர்....வலையுலகில் எப்போதோ பயணம் செய்ய வந்தவர்....இவரும் அணுகாத பதிவுகளே இல்லை குறிப்பிட்டு சொல்ல முடியாத படி அனைத்துமே அற்புதம் அவசியம்....இவர் கவிதைகள் பல கண் கலங்க வைத்திருக்கிறது இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது என் அருமை நண்பர் குணா அவர்கள்..இங்கு இப்படி ஒரு சிறந்த பதிவரை நமக்கு அளித்தமைக்கு நான் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.இவர் ஒரு சிறந்த மருத்துவரும் கூட.... இவர் தான் ஜீவநதி ஜீவராஜ் கலங்குகின்றோம் கண்பாருங்கள்.....
ஜீவநதியின் ஜீவராஜ் தங்கராசா... கவிதைகள், சமூக நோக்குள்ள பதிவுகள்,இலங்கையில் இவர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்புகள் , மருத்துவக் குறிப்புகள்,கவர்ந்த மனிதர்கள் என நிறைய விஷயங்களை அழகிய தமிழில் பகிர்ந்துகொள்கிறார்.
நண்பரே...
உங்கள் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்....
Add-tamil
வாங்க பகிரலாம்
மருத்துவம் மூடுமந்திரமாக இருந்த காலம் மலையேறி வெகுகாலம் ஆகிறது. எனவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லாமல் இப்படி வாழ்ந்தால் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் சுகநலனோடு நீண்டநாட்கள் வாழலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இவ் வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காதலின் மொழி
ஜீவநதி வலைப்பூவில் இருந்து காதல் கவிதைகள்
தங்கநிலா
சிறுவர் உலகம் புதுமையானது.சிறுவர்களின் எதிர்பார்ப்புகள், தனித்தன்மை வாய்ந்தவை எனவே அவர்களது உள்ளத்தை வளப்படுத்தும் நல்ல கருத்துக்களை எளிய சந்தங்களைப்பயன்படுத்தி சொல்லி இருக்கிறேன். வேலாயுதம் - தங்கராசா
காத்திருக்கும் பறவை
ஜீவநதி வலைப்பூவில் இருந்து எங்களது வாழ்க்கைக் குறிப்புகள்