ஜீ திரட்டி ... வலைப்பூக்களின் தொகுப்பு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறது.....
நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்துக்குச் செல்ல அதிலுள்ள படத்தின் மேல் சுட்டுங்கள்...

ஓராண்டு நிறைவில் ஜீவநதி



ஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு (13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் என்னைச் சுற்றி நிறைய நடந்துவிட்டிருக்கிறது.


பல நல்ல உள்ளங்களின் இணைவிற்கு காரணமாக இருந்து, துயர்நிறைந்த நாட்களில் நல்லதொரு தோழனாகச் செயற்பட்டது இந்த இணைய ஊடகம்.


பணிகாரணமாகவும், இங்குள்ள நிலை காரணமாகவும் பதிவிடுதலில் இருந்த தொடர்ச்சியற்றதன்மையையும் மீறி நிறைய அன்புள்ளங்களைச் சம்பாதிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.


தங்களது எண்ணப்பகிர்வுகள் மூலம் தொடர்ந்தும் உற்சாகமூட்டிவரும் பதிவுலக நண்பர்களுக்கும், இணைய வாசகர்களுக்கும் இணைப்புப்பாலமாகச் செயற்படும் திரட்டிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



நட்புடன் ஜீவன்.
11.08.2009


வலிநிறைந்த எம் வாழ்க்கைக் குறிப்புக்கள் - http://tparavai.blogspot.com/

காதல் கவிதைகள் - http://kmoli.blogspot.com/

மருத்துவக் கட்டுரைகள் - http://vaankapakiralam.blogspot.com/
Share/Save/Bookmark



வாங்க பகிரலாம்...ஜீவநதி...காத்திருக்கும் பறவை...தம்பைநகர்...காதலின் மொழி... தங்கநிலா... தம்பலகாமம்.க.வேலாயுதம் TWITTER....FACEBOOK....YOUTUBE ....ORKUT

2 உங்கள் எண்ணங்கள்:

யாழினி said...

வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் வாழ்க்கையில் எல்லாம் இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள்!

ரேணுகா ஸ்ரீநிவாசன் said...

ஜீவநதியின் ஓராண்டு நிறைவு நாள் இன்று (13.08.2009.குறுகிய காலத்துள் ஜீவநதியுடனான என் தொடர்பின் நினைவினை மீட்டிப் பார்க்கிறேன். எம்மவர் வாழ்வில் மிகவும் கொடுமையான மறக்கமுடியாத காலங்களில் என்னை ஓரளவாவது அமைதிப்படுத்தும் ஒரு இணையத் தொடர்பாக இருந்த ஜீவநதிக்கு நன்றிகள்.
இயற்கையின் எழில் கொஞ்சும் அழகினையும்,மருத்துவம் மற்றும் சமகால எம்மவர் பிரச்சினைகள், துயரங்கள், எம்முன் நீண்டிருக்கும் கடமைகள் என எல்லாவற்றையும் எம் கண்முன் கொண்டுவரும் ஜீவநதி தொடர்ந்து தங்கு தடையின்றிப் பிரவாகித்துப் பாய்ந்தோட என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களிலும் தொடரட்டும் உங்கள் பணி.


என்னுடைய எண்ணச் சிதறல்கள் சில இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன பகிர்தலுக்காக. இனப்பிரச்சனை, இடப்பெயர்வுகள், வார்த்தைகளுக்குள் வரையிடமுடியாத இன்னல்கள், என்றனைத்துக்கும் அப்பால் விரல் விட்டெண்ணக்கூடியதாய் விடிந்திருந்த பொழுதுகளின் பிரசவங்கள் இவைகள்.

தம்பலகாமம்,திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும். அதன் புகைப்படத்தொகுப்பு..

தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் படைப்புகளை இங்கே காணலாம்....

Twitter Updates

    follow me on Twitter
    நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்துக்குச் செல்ல அதிலுள்ள படத்தின் மேல் சுட்டுங்கள்...... வருகைக்கு நன்றி
    நண்பரே... உங்கள் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்....