புகைப்படங்கள்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

ஆலய தரிசனம்

சிறுவர் பாடல்

கவிதை

ஞாபகச்சிதறல்

வரலாற்றுப் புதையல்

கதை

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்

ரங்கநாயகியின் காதலன்

தமிழ் கேட்க ஆசை

விருந்தினர் பதிவு

Sunday, March 11, 2012

வணக்கம் நல்வரவு நண்பரே..

தம்பலகாமத்தில் பிறந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் நான் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவராகப் பணிபுரிகிறேன். எனக்குச் சிறுவயது முதல் இலக்கியம், சினிமா, நாடகம் , புகைப்படம் எடுத்தல் என்பன தொடர்பில் ஆர்வம் இருந்துவருகிறது. இவற்றோடு இப்போது எமது வரலாற்றை அறிந்து கொள்வதிலும் , எமது பாரம்பரியங்களின் தொன்மைதனை ஆவணப்படுத்துவதிலும் ஈடுபாடு அதிகரித்திருக்கிறது.

நான் வாழும் சூழலில், என்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை என் எழுத்துக்கள் மூலமாக மற்றவர்களோடு பகிர்துகொள்ளவிளைகிறேன். இலக்கிய வடிவங்களை கையாழுவதில் ஆரம்பப் படிநிலையில் இருக்கும் எனக்கு இணையம் பயிற்சிக் களமாக இருக்கிறது. நிறைய உள்வாங்கிக் கொள்ளவும், சிறியளவில் என்னுணர்வுகளை வெளிப்படுத்தி, அதற்குவரும் எதிர்வினைகள் மூலம் என் படைப்புக்களைச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.

பாடசாலைக்காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த இந்தப் பயணம் பின்னர் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் என்று தொடர்ந்து இன்று இணையதோடு இணைந்திருக்கிறது. 1991 இல் எனது முதல் ஆக்கம் வீரகேசரிப் பத்திரிகையிலும் அதைத்தொடர்ந்து மித்திரன் வாரமலர், தினமுரசு ,சங்கு நாதம் , இளவரசி , 'நாடி' மருத்துவ பீட ஆண்டிதழ் என்பவற்றிலும் வெளிவந்திருக்கின்றன.

அப்பப்பாவின் ( அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் ) தூண்டுதலால் எழுதுவதிலும் , வாசிப்பதிலும் ஏற்பட்ட ஆர்வம் பின்னாட்களில் பாடசாலை , கலாசாலை ஆசிரியர்களது ஊக்குவிப்பால் வலுப்பெற்றது. என்னை உருவாக்கிய கல்விக்கூடங்கள் தம்பலகாமம் சாரதா வித்தியாலயம், தம்பலகாமம் ஆதிகோணநாயகர் மகா வித்தியாலயம், இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி , யாழ்.மருத்துவபீடம்(2006) என்பனவாகும். பாடசாலைக்கல்விக்கப்பால் நாங்கள் வாழ்ந்த சூழலும் , எதிர் கொண்ட மிகக் கடுமாயன சூழ்நிலைகளும் ,இடப்பெயர்வும் எங்களைச் செதுக்கியது என்றால் மிகையில்லை.

பரந்துபட்ட வாசிப்பனுபவமும் , எண்ணங்களை எழுத்தாக்கும் செயன்முறையும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குவதோடு மனத்தைப் பண்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்தவகையில் எழுதுவதிலுள்ள ஆர்வம் தனியானதாக , தணியாததாக இருக்கிறது எனக்கு.


நட்புடன்  ஜீவன்.




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

11 comments:

  1. உங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்யுங்கள்....

    அன்புடன் ஜீவன்..

    ReplyDelete
  2. உங்கள் பாதைகள் மிக நீளமானவை....
    அதில் சஞ்சரிக்க எங்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுத்தமைக்கு நன்றி
    உங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துகின்றோம்
    செந்தூரன் (சிங்கப்பூர்)

    ReplyDelete
  3. நன்றி செந்தூரன் உங்கள் வாழ்த்து தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை தருவதாய் இருக்கிறது...

    ReplyDelete
  4. உங்கள் வலை அருமை..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாருங்கள் வண்ணத்துபூச்சியாரே உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  6. மிகுந்த வேலைகளுக்கு மத்தியில் எழுத்துப் பணியையும் ஓயாது தொடரும் உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. நன்றி நண்பரே

    ReplyDelete
  8. your r a growing tree
    we a expecting more flowers

    ReplyDelete
  9. ஜீவா உன் படைப்புக்கள் அற்புதம். வாழத்துக்கள். தங்கராசாவின் தங்கமகனே தமிழுக்காய் உன்காலம் கழிவதுடன் தமிழ் மண்ணுக்காயும் பணியாற்று. உயிர்களை; வாழவைக்கப் பிறந்த உத்மனே

    ReplyDelete
  10. psminaiyam.com
    http://www.psminaiyam.com/

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...